குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-03-17 14:52 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பேரீஸ் காலனி சாலை, அரிசிக்காரத்தெரு சாலை, கொண்டப்ப நாயக்கன் தெரு, எம்.ஜி.ஆர்.சாலை பகுதிகளில் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்