கரடு, முரடான சாலை

Update: 2024-03-10 16:55 GMT
கல்வராயன்மலையில் உள்ள மட்டப்பாறை முதல் வயலம்பாடி வரை உள்ள 7 கிலோமீட்டர் சாலை கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இந்த கரடு, முரடான சாலையில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்