கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ரவுண்டானா அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதியில் சிறு, சிறு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?