குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-03 12:53 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டப்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால், அந்த பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் சாலை பெயர்ந்து, மண்சாலை போலவே காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மழை நேரங்களில் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே விரைவாக சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்