அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2024-03-03 12:52 GMT

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 5-வது வார்டு ஜோதிபுரம், அய்யாசாமி நகர், புதிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்கு, வடிகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இதன் காரணமாக அந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் வடிகால் வசதி இல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. எனவே விரைவாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்