தரமற்ற சாலை

Update: 2024-02-25 12:07 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாடியில் புதிதாக அமைக்கப்படும் தார்சாலை மிகவும் தரமற்றதாக உள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களிலேயே சாலை மீண்டும் மோசமாகும் நிலை உருவாகும். இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அந்த சாலையை உடனடியாக ஆய்வு செய்து, தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்