குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-02-25 11:51 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி-புங்கனூர் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்