மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் புதிதாக போடப்பட்ட சாலையில் தற்போது வேகத்தடைகள் அமைத்துள்ளனர். அந்த வேகத்தடைகள் அதிக உயரமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சீரான உயரத்தில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?