அம்பை- தென்காசி மெயின் ரோட்டில் கிரான்ட் ஓட்டலில் இருந்து தென்காசி, பாபநாசம் பிரியும் சாலை வரையிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையோரம் அரிப்பு ஏற்பட்டதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.