சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி வழியாக சாத்தான்குளத்துக்கு அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.