தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-12-31 12:25 GMT

பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-1) எழுபதெட்டு ஏரிய பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மண்சாலையாக உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படும் அந்த சாலை மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை தார்சாலையாக அமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்