விபத்து அபாயம்

Update: 2023-12-24 12:49 GMT

கோவை உப்பிலிபாளையம் ஜிவி ரெசிடென்சி சந்திப்பில் பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த குழி மீது மூடி இல்லை. இதனால் அந்த வழியாக நடந்து வருபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதை தடுக்க அந்த குழிக்கு முன்னும், பின்னும் பிளாஸ்டிக் பெட்டிகளை வைத்து மூடி உள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பெட்டிகளை அகற்றிவிட்டு குழிக்கு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்