தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பஞ்சாயத்து கீழப்பிள்ளையாம்பேட்டை தெற்குதெருவில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதை வழியாக சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. பள்ளி ஆட்டோக்களும் சேற்றி சிக்கிக்கொள்வதால் மாணவ-மாணவிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.