மரக்காணம் தாலுகா சிறுவாடி கிராமத்தில் உள்ள நத்தம் பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பொதுமக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.