மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் வேகத்தடைகள் உயரமாக உள்ளது. அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காமலும், எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாமல் இருப்பதால் இரவில் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகதடையை சீரமைக்க வேண்டும்.