சேதமடைந்த சாலை

Update: 2023-12-17 17:08 GMT

சேலம் சூரமங்கலம் புனித ஜோசப் மகளிர் பள்ளி எதிரே மிட்லன் நகர் உள்ளது. இந்த நகர் வழியாக செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வேகமாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-இருதயம், சூரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்