தேனி கே.பி.ஆர். நகர் மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள வேகத்தடை அகற்றப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே அந்த பகுதியில் அவசியம் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.