நல்லவாடு மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதியில் இருந்து பூ.புதுக்குப்பம் கடற்கரைக்கு செல்லக்கூடிய இணைப்பு தார்சாலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைநீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக மாறியுள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?