கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் ஆல்வின் நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இங்குள்ள குழிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி காணப்படுகிறது. அந்த மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இது தவிர அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிகளில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.