மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பஸ் நிலையம் அருகில் வளைவான சாலையாக உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் மக்கள் சாலையைக் கடப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர். குழந்தைகள், பள்ளி மாணவர்கள் சாலை கடக்கும் போது அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே இருசக்கர வாகன ஒட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.