தஞ்சையை அடுத்த வல்லம் பேரூராட்சி கம்பர்நகர்,மின்நகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் மண்பாதை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், கனரக வாகனங்கள், பள்ளி வேன், ஆட்டோக்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.