சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-03 12:58 GMT

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கல்யாணசுந்தரம் நகர் 2-வது குறுக்குதெருவில் சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்