சாத்தான்குளம் அருகே புளியங்குளம் விலக்கு மெயின் ரோட்டில் இருந்து புளியங்குளம் ஊருக்குள் செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, ஜல்லி கற்களை பரப்பினர். பின்னர் பல மாதங்களாகியும் புதிய சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டுகிறேன்.