சாலை நடுவே பள்ளம்

Update: 2023-11-26 10:22 GMT

தஞ்சை ராசாமிராசுதார் சாலை ராஜராஜ சோழன் சிலை எதிரே உள்ள பகுதியில் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளம் உருவாகியுள்ளது. சாலை நடுவே ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். மழை பெய்யும் நேரங்களில் பள்ளத்தில் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை நடுவே உள்ள பள்ளத்தை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்