தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி மெயின் ஆற்றுப்பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பாலம் பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் ஆற்றுப்பாலம் அருகே உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.