சாத்தான்குளம் தாலுகா பெரியதாழை எம்.ஜி.ஆர். சிலை அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.