ஓசூர்- பாகலூர் சாலையில் என்.ஜி.ஓ. காலனி அருகே, பிரதான சாலையிலிருந்து ரமண ஸ்ரீ நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் சாலையின் முன்புறம் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைத்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்சர், ஓசூர்.