நாகர்கோவில் ெடரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலை உள்ளது. ராணித்தோட்டத்தில் தடிடெப்போ சாலை உள்ளது. இந்த சாலையில் 1-வது குறுக்கு தெரு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.