ஆபத்தான பள்ளம்

Update: 2023-10-29 15:09 GMT

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. காய்கறி மார்க்கெட் எதிரே சர்வீஸ் சாலையில் நீண்ட நாட்களாக மிகப்பெரிய பள்ளம் இருந்து வருகிறது. அதில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரகாஷ், ஓசூர்.

மேலும் செய்திகள்