தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த வளப்பக்குடி கீழத்தெருவில் சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சேதமடைந்த சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.