சேறும், சகதியுமான சாலை

Update: 2023-10-22 15:48 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் ஊராட்சி ஜிஞ்சம்பட்டியில் இருந்து ஆம்பள்ளி வரை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து உள்ளது. மேலும் மழை காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பசுபதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்