தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த மனையேரிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ராயராம்பட்டி, துவாக்குடி பகுதிக்கு செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?