தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அண்டகுடி-சுந்தரப்பெருமாள் கோவில் பகுதி சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையில் ஆய்வு மேற்கொண்டு தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.