குண்டும், குழியுமான சாலை

Update: 2023-10-15 17:19 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே சேந்தமங்கலம் - புதன் சந்தை பிரதான சாலையில் இருந்து நைனாமலை கோவிலுக்கு பிரிந்து செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணி முடிவடையாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்