சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-15 14:42 GMT

மயிலாடுதுறை தாலுகா கடக்கம்-புலவனூர் சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக காட்சி அளிக்கிறது. கரடு, முரடான சாலையினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பொதுமக்களும் சாலையில் மிகுந்த சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்