சங்கராபுரம் மெயின்ரோட்டில் இருந்து பணிமனை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து கந்தலாகி கிடக்கிறது. சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். மேலும் ஜல்லிகள் பெயா்ந்து ஊசி போல் காணப்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயரை பதம் பார்த்து விடுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.