சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-08 13:13 GMT

தஞ்சை ஜெபமாலைபுரம் போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களி்ன கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்