போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-08 12:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் சன்னதி வீதி சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலுக்கு வருபவர்களின் வாகனங்களை இடையூறின்றி நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

            

மேலும் செய்திகள்