மயிலாடுதுறை மீன்மார்க்கெட் ரோடு (காந்திஜி ,காமராசர் சாலைகளை இணைக்கும் சாலை) பகுதி முறையான பாராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையினால் சிறு,சிறு விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.