குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-10-08 11:31 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி-பனங்குடி இடையிலான சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும்,குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்