நாசரேத் ரெயில் நிலையம் அருகில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு அடுத்தடுத்து அமைக்கப்பட்ட உயரமான வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசாததால், இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து, வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.