சாலையில் பள்ளங்கள்

Update: 2023-10-04 18:01 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் இருந்து குருசாமிபாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி சாலை ஓரங்களில் ஆங்காங்கே பெரிய குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் அப்படியே உள்ளது. தரைமட்ட பாலம் ஏற்கனவே இருந்த சாலையில் இருந்து 1 அடி உயரத்தில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள குழிகளையும், பள்ளங்களையும் சரி செய்து விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், ஆண்டகளூர்கேட்.

மேலும் செய்திகள்