சாலைவசதி வேண்டும்

Update: 2023-10-04 14:36 GMT


திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாய் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்