திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும், வாகனங்களில் செல்லும் போது கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.