விபத்து அபாயம்

Update: 2023-10-04 12:11 GMT

கூடலூர் தாலுகா ஆரோட்டுப்பாறை பாரதி நகர் பள்ளிவாசல் முன்பு சாலை முழுவதும் பழுதடைந்து சிதைந்து காணப்படுகிறது. இதில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியதோடு அப்படியே மூடாமல் போட்டு விட்டனர். இதனால் கனரக வாகனங்கள் சென்று வர முடியாத நிலை இருக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை சரி செய்வதோடு சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்