கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரில் மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படுகின்ற முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-பசுபதி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.