குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-10-01 11:40 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா புங்கனூர் வெண்டயம்பட்டி சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்