சாலையில் பள்ளம்

Update: 2023-10-01 11:39 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ரோடு பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதன்காரணமாக சாலை வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்