குண்டும், குழியுமான சாலை

Update: 2023-10-01 10:32 GMT

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் தார் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் அந்த சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்