நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறை மகாராஜபுரம் கீழ்பாதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சரியாக அமைக்கப்படாததால் தார்ச்சாலையில் புற்கள் முளைத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் சென்றால் கற்கள் பெயர்ந்து விடும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலையில் உள்ள புற்களை அகற்றி நன்றாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை